இந்தியா

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போதே பொறியியலாளர் மாரடைப்பால் மரணம்..!(வீடியோ)

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியைச் நேர்ந்த பொறியியலாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நொய்டா பொறியியலாளர் விகாஸ் நேகி என்பவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவராவார். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.

இந் நிலையில் நொய்டா பகுதியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர், ஓட்டங்களை எடுக்க முற்பட்டபோது, சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்ததை கண்ட சக வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொறியியலாளர் மாரடைப்பால் மைதானத்தில் விழுந்து இறந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே