ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு – கண்காணிக்கப்படவுள்ள பல்பொருள் அங்காடிகள்
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இது தொடர்பில் ஆஸ்ஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், பல்பொருள் அங்காடிகள் லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக நுகர்வோர் மீது அழுத்தம் கொடுக்கின்றன.
மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசின் 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் மின் கட்டண விலை, குழந்தை பராமரிப்பு செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பல்பொருள் அங்காடிகள் தொடர்பான செனட் சபை விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் அசாதாரண விலை உயர்வுகள் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படும்.