ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த 05 பேர் மீட்பு!
 
																																		ஸ்லோவேனியாவில் நிலத்தடி குகையில் சிக்கியிருந்த மக்களை மீட்க 6 டைவர்களைக் கொண்ட சிறப்பு டைவிங் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் 05 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழை காரணமாக நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் குழுவும் அவர்களது வழிகாட்டியும் சிக்கிக் கொண்டனர். குகை நுழைவாயிலில் இருந்து 1.3 மைல் தொலைவில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானபோது, 2018 ஜூன் மாதம் தாய்லாந்தில் குழந்தைகள் குழு ஒன்று தங்கள் கால்பந்து பயிற்சியாளருடன் குகையை பார்வையிடச் சென்று அதில் சிக்கிக்கொண்ட சம்பவத்தை பலர் நினைவு கூர்ந்தனர். சுமார் 2 வாரங்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.
(Visited 3 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
