அமெரிக்காவில் ஹோட்டலில் பரபரப்பு – திடீர் வெடிப்பில் 21 பேர் காயம்

அமெரிக்கா டெக்சஸில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஏற்பட்ட வெடிப்பில் 21 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாய் உள்ளதாக மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
20 மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலின் சாலையோரச் சுவரும், கதவுகளும் வெடிப்பில் ழுமையாகச் சிதறின.
பலர் இடிபாடுகளில் சிக்கினர். 15 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடிப்பு நேர்ந்தபோது 20க்கும் அதிகமானோர் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தனர்.
எரிவாயுக் கசிவால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)