ட்ரம்ப் மீதான வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கை விசாரிக்க உள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் இருந்து அவரை நீக்கிய கொலராடோ மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிரம்பின் மேல்முறையீட்டை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளது, மேலும் இந்த முடிவு நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தை ட்ரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட நிலையில், இதற்கு ட்ரம்தான் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ட்ரம்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.