சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் அல்லது வசிக்கும் நபர்களுக்கு விசேட அறிவிப்பு
சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் அல்லது வசிக்கும் நபர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தும் தளமாக சிங்கப்பூரைப் பயன்படுத்தக் கூடாது என சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இங்கு வெளிநாட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது அல்லது நிதி சேகரிப்பது ஆகியவைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு தனிநபர் அல்லது குழுவாக இருந்தாலும் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்காக வேண்டி சிங்கப்பூர் தளமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற குற்றச்சாட்டுகள் ஆன்லைனில் பரவி வருவது குறித்து உள்துறை அமைச்சகம் அறிந்திருப்பதாக கூறியது.
அதோடு மட்டுமல்லாமல் அதில் சில வேட்பாளர்களுக்கு இங்கிருந்து நிதி திரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட எச்சரிக்கை நினைவூட்டலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.