உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய 300 ஏவுகணைத் தாக்குதல்கள் – 40 பேர் கொல்லப்பட்டனர்
புதிய ஆண்டின் தொடக்கத்தில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராணுவ மோதல்கள் கடுமையான திருப்பத்தை எடுத்துள்ளன.
கடந்த 5 நாட்களில் ரஷ்யாவால் 300 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா 200 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் தென்மேற்கு பிராந்தியம் மற்றும் கிரிமியாவில் இருந்து நேற்றிரவு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, உக்ரைனும் தொடர்ந்து ரஷ்ய இலக்குகளை தாக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை, ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைன் ராணுவம் நடத்திய தொடர் ஆளில்லா விமானத் தாக்குதலில் 25 ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர்.