தென் கொரிய எதிர்க்கட்சித் தலைருக்கு எதிர்பாராத நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கத்தியால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
துறைமுக நகரமான பூசானுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
59 வயதான லீ ஜே மியுங்கின் கழுத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லீ ஜே மியுங் புசான் நகரில் விமான நிலையம் கட்டப்படுவதைக் கவனிக்கச் சென்றார்.
பத்திரிகையாளர்கள் குழுவும் அவரை சூழ்ந்து கொண்டது. திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்..
எதிர்க்கட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய விதம், காயம் அடைந்து தரையில் விழுந்தது மட்டுமின்றி, ஆதரவாளர்கள் காயத்தை இறுக்கிக் கொள்ள கைக்குட்டை போட்டு எதிர்க்கட்சித் தலைவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விதமும் ஊடகவியலாளர்களின் கமெராவில் பதிவாகியுள்ளது.
(Visited 5 times, 1 visits today)