பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பலத்த பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்று வரும் இராணுவ மோதல்கள் காரணமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியின் புகழ்பெற்ற கொலோன் நகரில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் பாதுகாப்பை பலப்படுத்த ஜெர்மனி அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரான்ஸ் நாடு முழுவதும் பாதுகாப்புக்காக சுமார் 90,000 காவல்துறை அதிகாரிகளை நியமித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)