இலங்கையில் அதிக வரிச்சுமை – 60% குறைந்த வருமானம்
அதிக வரிச்சுமை காரணமாக நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60% குறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வருமான மட்டம் 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, செலவு மட்டம் 90 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமானோர் கடனில் தவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களின் வருமானம் 3.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சக்வலயில் சௌகரியமான வகுப்பறைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஹபரணை மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சௌகரியமான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் தன்னிச்சையாக வரிச்சுமையை அதிகரிப்பதன் காரணமாகவே நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் திருடர்களிடம் ஆணை பெற்று ஜனாதிபதி எடுக்கும் இவ்வாறான தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.