கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
கொழும்பு நகரில் டிசம்பர் 31 மாலை 05.00 மணி முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரில் பல விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த விசேட வேலைத்திட்டம் கோட்டை கொம்பஞ்சாவீதிய மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பால் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வாகனங்கள் அதிகமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் பல வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றார்.
எந்தவொரு வாகனமும் இழுத்துச் செல்லப்பட்டால் அதற்கான செலவு மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.