மைனஸ் 50 டிகிரி குளிரில் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் உயிருக்கு போராட்டம்!
கடும் குளிரில் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்தபடி பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஜீரியா நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் ஓரான் நகருக்கு நேற்று ஏர் அல்ஜீரி விமானம் புறப்பட்டுச் சென்றது. சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது விமான ஊழியர்கள் தொழில்நுட்ப சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் விமானத்தின் சக்கரத்துக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர். அந்த இளைஞருக்கு சுமார் 20 வயதிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் போன்ற குளிர் பிரதேச நாடுகளில் விமானம் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது வெப்பநிலை -50 C முதல் -60 செல்சியஸ் வரை இருக்கும். அதுபோன்ற மிக மோசமான வானிலையில் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணிக்கும் நபர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முன் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்தவர்களில் 70% பேர் உயிரிழந்துள்ளனர்.