இலங்கை

கொழும்பு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

கொழும்பில் தற்சமயம் கொரோனா அல்லது வேறு எந்த தொற்று நோய்களும் பரவவில்லை என கொழும்பு மாநகர சபையின் அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

எனினும் கொழும்பு மக்கள் எந்தவொரு பரவல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு கொழும்பில் கொரோனா அல்லது வேறு எந்த வைரஸ் நோய்களும் பரவவில்லை. எப்படியிருப்பினும் எதிர்கால பரவலை தடுக்க முகக் கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையுடன் இணைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதாரத் துறைகளில் உள்ள மற்ற மருத்துவ நிபுணர்களுடன் சேர்ந்து கூட்டங்களை நடத்தி, நகரத்தில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் கண்டி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து இரண்டு கொரோனா மரணஙகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்