இஸ்ரேல் சார்பாக “நாசவேலையில்” ஈடுபட்ட நால்வரை தூக்கிலிட்ட ஈரான்
இஸ்ரேல் சார்பாக “நாசவேலையில்” ஈடுபட்டதாகக் கூறும் நான்கு பேரை தூக்கிலிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது
ஈரானின் வடமேற்கு மாகாணமான மேற்கு அஜர்பைஜானில் அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறையின் மிசான் இணையதளம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கே ஈரான் மரண தண் டனை விதித்துள்ளது.
உத்தியோகபூர்வ மிசான் செய்தி நிறுவனம் குற்றம் சாட்டப்பட்ட நான்கு உளவாளிகளை வஃபா ஹெனாரே, ஆரம் ஓமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி என்று அடையாளம் கண்டுள்ளது.
ஈரானிய வழக்குரைஞர்கள் நால்வரும் மொசாட் அதிகாரிகளுடன் வீடியோ தொடர்பு மூலம் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தெஹ்ரான் மற்றும் ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மற்றும் ஹோர்மோஸ்கான் மாகாணங்களில் தங்கள் நடவடிக்கைகளை அரங்கேற்றியதாகவும் தெரிவித்தனர்.
“இந்த குழுவின் உறுப்பினர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய சிலரின் கார்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தனர் மற்றும் படங்களை எடுத்து மொசாட் அதிகாரிகளுக்கு அனுப்புவதன் மூலம் பணம் பெற்றனர்” என்று மிசான் தெரிவித்துள்ளது.
“இந்த நால்வரும் மொசாட்டுடன் இணைக்கப்பட்ட 10 பேர் கொண்ட நாசவேலை குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர், அதன் முக்கிய நோக்கம் ஈரானிய உளவுத்துறை முகவர்களை அடையாளம் காண்பது … ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய சதிகளை முறியடிப்பது” என்று ஃபார்ஸ் தெரிவித்துள்ளது. “சிக்கலான உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புக்குப் பிறகு அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”