இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா: 6 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இருவரும் கர்நாடகா கேரளா மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் தலா ஒரு நபரும் என 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர்.
புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் குளிர் காலத்துக்கு பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டிசம்பர் 26-ல் வெளியான தகவல்படிஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109- எட்டியுள்ளது.
இந்த பாதிப்பால் கர்நாடகா கேரளா கோவா குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஜேஎன்.1 திரிபு வைரஸ் எளிதில் பரவக் கூடியது என்றும் இது முதலில் குளிர் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும்இ அதன் பிறகு மேல் சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.