செர்பியாவில் மேற்கு நாடுகள் பதற்றத்தைத் தூண்டுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு
செர்பியாவில் டிசம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல்களில் மோசடி செய்ததாகக் கூறப்படும் போராட்டங்களால் அதிர்ந்த மாஸ்கோ நட்பு நாடான செர்பியாவில் மேற்கு நாடுகள் பதற்றத்தைத் தூண்டுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
செர்பியாவில் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போதும் அதற்குப் பிறகு எட்டு போலீசார் காயமடைந்தனர் மற்றும் 38 பேர் கைது செய்யப்பட்டதாக செர்பியாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.
செர்பிய தேர்தலில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஜனாதிபதி வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது. செர்பிய முற்போக்கு கட்சி 47 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி (வன்முறைக்கு எதிரான செர்பியா) 23.56 சதவீத வாக்குகளும், செர்பிய சோசலிச கட்சி 6.56 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.