இலங்கை

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாட்டிற்குள் பிரவேசித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட குழுவில், கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2023 வரை சட்டவிரோதமாக இடம்பெயர்நத 14 பேரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிசார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அத்தகைய நபர்கள் அச்சத்தின் பேரில் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்