இஸ்ரேல் தேசிய கொடியுடன் கப்பல்கள் மலேசிய துறைமுகத்தில் நிற்க தடை
“அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை” புறக்கணிப்பதாகக் கூறிய காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மலேசியா புதன்கிழமை இஸ்ரேலியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல்களை அதன் துறைமுகங்களில் நிறுத்த தடை விதித்தது.
அதுமட்டுமல்ல, இஸ்ரேலுக்குச் செல்லும் எந்தக் கப்பலும் மலேசிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கும் தடையளித்துள்ளதாக அந்நாட்டின் தலைமை அமைச்சர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள், அடிப்படை மனித நேய கோட்பாட்டைப் புறக்கணித்து, சர்வதேச சட்டத்தை மீறி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் வன்முறை செயல்களை நடத்தி வருவதற்கான பதிலாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் தடை நடவடிக்கை குறித்து இதுவரை, இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.
(Visited 4 times, 1 visits today)