நாடு முழுவதும் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது, வெளிநாடு தப்பிச் செல்விடாமல் தடுக்க நடவடிக்கை
குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்வதற்கான நீதித்துறை நடவடிக்கையில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்களையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த விசேட அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்த முடியாத நபர்களின் 09 வாகனங்கள் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் கருத்துக்கமைய, குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.