பிரிட்டிஷ் பெண்களை துஷ்பிரோயகம் செய்யும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள்: சுயெல்லா ப்ரேவர்மன் குற்றச்சாட்டு
பிரித்தானிய நாட்டில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள் பிரித்தானிய பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன் ” பிரித்தானியாவில் வாழும் பாகிஸ்தானிய ஆண்கள் Grooming gangல் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கற்பழிப்பு, போதைப்பொருள் மற்றும் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.Grooming gangகளில் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்களின் பிரதிநிதித்துவம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைத் தூண்டியுள்ளன.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான தனது கடுமையான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், பிரித்தானியாவிலுள்ள வெள்ளை ஆங்கிலேயர்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் குற்றம் சாட்டி பாகிஸ்தானியர்களை குறை கூறியுள்ளார்.சில பிரித்தானிய வாழ் பாகிஸ்தானியர்கள் சிறுமிகள் மீது துஷ்பிரயோக குற்றங்களை செய்து வருவதாகவும், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகம் அரசியல் சரியான தன்மையை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
”அரசு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் காவல்துறை இந்த துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதையும், பயத்தால் இனவெறி என்று அழைக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்துள்ளனர்.”இந்த குற்றவாளிகளில் பலர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள், மேலும் இந்த குற்றவாளிகளை பயம் இல்லாமல் கண்காணித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்” என்று உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் Grooming gang என்பது குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் நபர்களின் குழுவைக் குறிக்கிறது.உள்துறைச் செயலாளரின் கருத்துக்கு நாடாளுமன்றத்தில் பலரும் எதிர் குரல் எழுப்பியுள்ளனர். சிலர் குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் குற்றம் செய்பவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மறுத்துள்ளனர்.