இலங்கையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகமாக காணப்படும் சூழலில், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த பருவ மழையால் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கரில் சராசரியாக 5,000 கிலோ வெங்காய மகசூல் கிடைக்கும் என்றாலும், இம்முறை ஒரு ஏக்கரில் இருந்து 1,000 கிலோ மட்டுமே கிடைத்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இம்மாத இறுதி வரை சதொச ஊடாக 1 கிலோ வெங்காயம் 400 ரூபாவிற்கு வழங்கப்படும் என இலங்கை சதொச தலைவர் பசட யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை வர்த்தக அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அடுத்த வாரம் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.