அடுத்த ஆண்டில் பெருமளவான அமெரிக்கர்கள் தொழிலை இழப்பார்கள்!
இந்த ஆண்டின் இறுதியில் வேலையின்மை விகிதம் 3.9 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக உயரும், இது மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அடுத்த ஆண்டில் (2024) தொழிலை இழக்க நேரிடும் என்பதை காட்டுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2025 வரையிலான பொருளாதாரத்தின் தற்போதைய பார்வை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மாற்றங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களின் விளைவாக, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2023 இல் 2.5 சதவீதத்திலிருந்து 2024 இல் 1.5 சதவீதமாக குறையும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
பலவீனமான நுகர்வோர் செலவுகள், குறைந்த குடியிருப்பு அல்லாத முதலீடு மற்றும் குறைக்கப்பட்ட ஏற்றுமதிகள் உள்ளிட்ட பல காரணிகளால் பொருளாதார நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)