பிரித்தானியாவில் 3 ஆண்டுகளாக கூடாரத்தில் தங்கி நிதி திரட்டிய சிறுவன்!
பிரித்தானியாவில் புற்று நோயினால் மரணமடைந்த தனது நண்பனை கவனித்துக் கொண்ட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மூன்று வருடங்கள் வீட்டை விட்டு கூடாரத்தில் கழித்து சிறுவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் உலகெங்கிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரித்தானியாவில் நாட்டைச் சார்ந்த 13 வயது சிறுவனான மேக்ஸ் வூசி தான் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார்.
இவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டிலிருந்து வெளியேறி கூடாரத்தில் சென்று தங்க ஆரம்பித்தார். இந்த வருட மார்ச் மாதத்துடன் மூன்று வருடங்கள் முடிவடைந்து இருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மேக்ஸ் வூசியின் நண்பர் ரிக் அபௌட் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.
இறக்கும் தருவாயில் கூடாரம் ஒன்றை மேக்ஸிற்கு அபாட் பரிசளித்துள்ளார். தனது நண்பனின் கடைசி பரிசான அந்த கூடாரத்தில் தங்கி நிதி திரட்டி அதன் மூலம் தனது நண்பனை பார்த்துக்கொண்ட தொண்டு நிறுவனத்திற்கு சிறுவன் மேக்ஸ் நிதியளித்திருக்கிறார்.
இந்த மூன்று ஆண்டுகள் கூடாரத்திலிருந்து நிதி திரட்டல் பயணத்தின் மூலம் ஏழரை லட்சம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 7.5 கோடி ரூபாய் நிதியாக திரட்டி இருக்கிறான்.
இந்தப் பணத்தின் மூலம் 500 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட காலமாக டென்டிலிருந்து நிதி திரட்டி இந்த சிறுவனை தி பாய் இன் தி டென்ட் என அன்போடு அழைக்க தொடங்கியுள்ளனர்.