உக்ரைனுக்கு 273 மில்லியன் டாலர்களை அறிவித்த நோர்வே
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , முன்னதாக அறிவிக்கப்படாத பயணமாக புதன்கிழமை நோர்வே வந்தடைந்தார் என்று நோர்வே அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெலென்ஸ்கி மற்றும் நார்வே பிரதமர் Jonas Gahr Støre ஆகியோர் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது குறித்து கூட்டங்களை நடத்துவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு நோர்வே 3 பில்லியன் கிரீடங்களை நன்கொடையாக அளிக்கும் என்று பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோயர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நோர்வே பயணம் குறித்து கூறியதாவது:
நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து, பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஐரோப்பாவில் நமது பொதுவான எதிர்காலம் மற்றும் கண்டத்தில் நியாயமான மற்றும் நீடித்த அமைதி.குறித்து விவாதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.