யாழில் வேகமாக பரவி வரும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!
																																		யாழ்.மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (12.12) இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக விவசாயப் பிரிவினரால் இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு யாழ் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி, வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், மாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சசிப்பிரபா கைலேஸ்வரன், விவசாயதிணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)
                                    
        



                        
                            
