பரபரப்பிற்கு மத்தியில் நேட்டோ கூட்டமைப்பில் அதிகாரபூர்வமாக இணையும் பின்லாந்து
நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்துவிரைவில் அதிகாரபூர்வமாக சேர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ தலைமைச் செயலாளர் Jens Stoltenberg இதனை கூறியுள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில்இணைந்துகொள்வதற்கான நடைமுறைக்கு 30 உறுப்புநாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
நேட்டோ தலைமையகத்தில் விரைவில் பின்லந்துக் கொடியும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த துருக்கி, 30ஆம் திகதி பின்லதந்து சேர்வதற்குச் சம்மதம் தெரிவித்தது.
பின்லந்தின் திறன்வாய்ந்த படைகளும், எதிர்காலத்துக்கான திறன்களும், வலுவான ஜனநாயகக் கட்டமைப்பும் நேட்டோ கூட்டணிக்கு மேலும் வலுச் சேர்க்கும் என Stoltenberg குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி, ஹங்கேரி இரு நாடுகளின் எதிர்ப்பால் சுவீடன் நேட்டோ கூட்டணியில் சேர்வது இன்னும் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.