ஐரோப்பிய நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பு : திரளாக ஒன்றுக்கூடிய மக்கள்!
காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து அதிகரித்து வரும் யூத எதிர்ப்புக்கு எதிராக நேற்று (10.12) ஆயிரக்கணக்கான மக்கள் பெல்ஜியம் மற்றும் ஜேர்மன் தலைநகரங்களில் பேரணி நடத்தினர்.
இதற்கு முன்பு பாரிஸ் மற்றும் லண்டனில் நடந்த அணிவகுப்புகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினிலும் போராட்டங்கள் வெடித்தன.
குறைந்தது 4,000 பேர் இந்த பேரணிகளில் கலந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)