வியட்நாம் செல்லும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் டிசம்பர் மாதம் 12-13 திகதிகளில் வியட்நாம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடுவார் என சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த விஜயத்தின்போது அரசியல் பாதுகாப்பு, பலதரப்பு மற்றும் கடல்சார் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார்கள், மேலும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவார்கள் என்று செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.
ஜியின் வருகையை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி செய்துள்ளது. இரு நாடுகளும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதால், பல சீனத் தலைவர்கள் வியட்நாமிற்கு வருகை தந்துள்ளனர்.
சீனா வியட்நாமின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், அதன் உற்பத்தித் துறைக்கான இறக்குமதியின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.