தமிழ்நாடு

கடலூரில் 17 வயது மாணவன் வெட்டிக்கொலை… நண்பன் உட்பட நால்வர் கைது!

ஸ்ரீமுஷ்ணம் அருகே, காதல் பிரச்சினையில் 17 வயது மாணவன் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தில் நண்பன் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் காலனியை சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் கோகுலகிருஷ்ணன்(17). இவர், கடந்த 5ம் திகதி மாலை குறிஞ்சிக்குடி கிராமத்தில் உள்ள தரை கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார், கோகுலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட கோகுலகிருஷ்ணன்

இதையடுத்து, சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் சோழத்தரம் பொலிஸார், விசாரணை நடத்தினர். அதில் முதற்கட்டமாக மீட்கப்பட்ட கோகுலகிருஷ்ணனின் உடலில், பல இடங்களில் காயங்கள் இருந்ததை கண்ட பொலிஸாரால், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். இது குறித்து சோழத்தரம் பொலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது கோகுலகிருஷ்ணனை, அவரது நண்பன் தேவேந்திரன் மகன் வாசுதேவன்(24) என்பவர் சம்பவத்தன்று அழைத்து சென்றது தெரியவந்தது.

 

கைது செய்யப்பட்ட வாசுதேவன், சரவணன்

இதையடுத்து, வாசுதேவனை பொலிஸார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, சித்தப்பா சரவணன்(55) மற்றும் அவரது மகன்கள் நவீன்(21), சூரியா(18) ஆகியோர் சேர்ந்து, கோகுலகிருஷ்ணனை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார். சரவணன் மகளை கோகுலகிருஷ்ணன் காதலிப்பதாக கூறி வந்தார். இதை கண்டித்தும் கேட்காததால், கோகுலகிருஷ்ணனை குறிஞ்சிக்குடிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். இதையடுத்து, சோழத்தரம் பொலிஸார் வாசுதேவன், சரவணன், நவீன், சூரியா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்