மரணங்களுக்கு வருந்துகிறேன் – பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட தகவல்
COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்கு வருந்துகிறேன் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்குத் தாம் மிகவும் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுச் சூழலை நாடு கையாண்ட விதம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையில் அவர் சாட்சியம் அளித்தார்.
விசாரணையின் தொடக்கத்தில் அவர், சாட்சியம் அளிப்பதில் மகிழ்ச்சிகொள்வதாகவும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எதிர்கொண்ட வேதனைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.
ஜொன்சன் 2 நாள்களுக்கு விசாரிக்கப்படுவார். உலகில் கோவிட் நோயால் ஆக அதிக மரணங்களை எதிர்நோக்கிய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும்.
அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அவர் பிரித்தானியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.