பிரான்ஸில் கடும் குளிருக்கு மத்தியில் வீடின்றி தவிக்கும் மக்கள்
பிரான்ஸில் வீதிகளிலும், பூங்காக்களிலும், மெற்றோ சுரங்கங்களிலும் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளதென தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தங்குமிடமற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் தற்போது 3,000 இற்கும் அதிகமானோர் வீதிகளில் படுத்து உறங்குகின்றனர். சென்ற ஆண்டை வித 16% சதவீதத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் 450 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7,572 பேர் இந்த குளிர் காலத்தில் தங்குமிட கோரிக்கைக்காக 115 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர். வீடற்றவர்களில் 2,373 சிறுவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)