உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மற்றும் நேபாளம் இடையே நெருக்கடி
நேபாளம் தனது குடிமக்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டாம் என ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நேபாள வீரர்களை உடனடியாக தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு நேபாளம் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட நேபாள வீரர்கள் 06 பேர் உக்ரைனில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் நேபாளம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அதன்படி, உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்குமாறும், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறும் நேபாள வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளது.
“கூர்க்காக்கள்” என்று அழைக்கப்படும் நேபாள வீரர்கள் தங்கள் வீரம் மற்றும் சண்டைத் திறமைக்காக உலகம் முழுவதும் பிரபலமானவர்கள்.
இந்தியா மற்றும் பிரிட்டனுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் காரணமாக நேபாள வீரர்கள் பிரிட்டிஷ் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து பணியாற்றினாலும், ரஷ்யாவுடன் அத்தகைய ஒப்பந்தம் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.