இலங்கை

பயங்கரவாத தாக்குதல் : பாரிஸ் தாக்குதல் குறித்து மக்ரோன் விமர்சனம்!

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் ஜெர்மன் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தில் பொலிஸார் சரியான சமையத்தில் வரவில்லை என்றால் மேலும் பலர் உயிரிழந்திருப்பார்கள் எனக் கூறியதாகவும், பாலஸ்தீனர்களின் நிலை கண்டு தான் கவலையடைவதாக தெரிவித்தாகவும் சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள் சந்தேகநபர் 2016 இல் மற்றொரு தாக்குதலைத் திட்டமிட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் பிரெஞ்சு பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருந்தார், மேலும் அவர் மனநல கோளாறுகள் உள்ளவராக அறியப்பட்டவர் என்றும் அமைச்சர் கூறினார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!