இலங்கைக்கு சூறாவளி அச்சுறுத்தல் – அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த நிலை சூறாவளியாக உருவாகி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த நிலை மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3ம் தேதி சூறாவளியாகவும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று பிற்பகல் முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 1000 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சூறாவளி நிலை காரணமாக இலங்கைக்கு பாரிய ஆபத்து எதுவும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியிடம் நாம் மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.