வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
தமிழக முழுவதும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேம்பன் பட்டியில் உள்ள
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோயில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலாகும் கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டகப்படி காரர்களால் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து திருவீதி உலா மற்றும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று காலை 5மணி அளவில் நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கிழக்கு ரத வீதியில் தொடங்கி நான்கு வீதிகளின் வழியாக சுப்பிரமணிய சுவாமி தேர் வலம் வந்தது.
தேரானது மா பலா வாழை இளநீர் உள்ளிட்ட அப்பகுதியில் விளையும் மலர்கள் மற்றும் காய்கறிகள் கனிகள் உள்ளிட்டவற்றை கொண்டு தேரானது அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு.
தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் நிலையை வந்தடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.