மிகவும் நூதனமான முறையில் போதைப்பொருள் கொண்டுச் சென்ற ஒருவர் கைது
 
																																		ஒலுபொதுவ பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்லும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து வைத்து கடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சந்தேகம் ஏற்படாத வகையில் போதைப்பொருள் பொதிகளை வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பெண்களை பணத்திற்காக விற்கும் இடமொன்றின் முகாமையாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
        



 
                         
                            
