குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல்: சரி செய்யும் மூச்சு பயிற்சி
குளிர்காலத்தில் பலர் சளி மற்றும் காய்ச்சலால் நோய் வாய்ப்படுகிறார்கள், இது உடலைப் பாதிக்கலாம். யோகா பயிற்சியாளர் அதிதி ஜவார், வானிலை மாற்றங்களால் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க உதவும் யோகா ஆசனத்தை பகிர்ந்து கொண்டார்.
வெளியே கடும் குளிர் நிலவுகிறது. நீங்கள் சளி, இருமல் அல்லது குளிர் காலங்களில் ஏற்படும் பிற காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடியவராக இருந்தால், உங்கள் உடலை சூடேற்ற உதவும் ஒரு பிராணயாமா இங்கே உள்ளது.
மூச்சுதான் மருந்து என்ற அவர் ‘சூரியபேதி பிராணயாமா’ என்ற சுவாச நுட்பத்தை செய்து காட்டினார்.
இதில் உங்கள் இடது நாசியை சுட்டி விரலால் லேசாக அழுத்தி வலது நாசி வழியாக மூச்சை நல்ல ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். பிறகு வலது நாசியை லேசாக அழுத்தி இடது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும்.
இதை ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை செய்யலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
அதன் பலன்களை விளக்கிய அதிதி ஜவார், சூரியபேதி பிராணயாமம் நமது உடலில் வெப்ப நிலையை செயல்படுத்தி, சூடாக வைக்கிறது. சளி, சைனசிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி, கோவிட் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் போன்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது, என்றார்.
இதை ஒப்புக்கொண்ட யோகா பயிற்சியாளர் இரா திரிவேதி, பிராணயாமா – வலது நாசியில் (சூரிய நாடி என்றும் அழைக்கப்படுகிறது) மட்டுமே கவனம் செலுத்துகிறது – இது ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உதவுகிறது.
இந்த பயிற்சி செரிமான நெருப்பைத் தூண்டுகிறது மற்றும் சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது செரிமானப் புழுக்களை நீக்குகிறது. வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான மண்டலத்தை பாதிக்கும் நோய்களை சரி செய்கிறது.
கூடுதலாக இது ஒருவரின் சைனஸ் நிலையை மேம்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது முன்பக்க சைனஸை சுத்தப்படுத்துகிறது, மேலும் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இருப்பினும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை என்று அதிதி கூறினார்.