தொடரும் தீவிர போர் : ஹமாஸ் அமைப்பின் தளபதி மரணம்
காஸா பகுதியில் 4 நாள் போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் இதுவரை 26 இஸ்ரேலிய பொதுமக்களும் 78 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, வடக்கு காசாவின் பொறுப்பாளரான அஹ்மத் அல்-கண்டூர் போரில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது
மறுபுறம், மேற்குக் கரையில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கை தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
போரினால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
48 நாட்களாக இடம்பெற்றுவரும் யுத்தத்தில் 14,854 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 5,850 பேர் குழந்தைகள். அதேசமயம், மேற்குக் கரையில் இருந்து செயல்படும் பாலஸ்தீனிய ஆணையம், 12,700 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.