செய்தி தமிழ்நாடு

குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடவிளாகம் கிராமத்தில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து,

இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற போது குழந்தை கூச்சலிடவே குழந்தையை விட்டு தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர்,

பின்னர் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கேரி கிராமத்தைச் சேர்ந்த வசந்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாந்தகுமார் வயது 26 என்பது தெரிய வந்தது இவன் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடியவனாக தெரியவந்ததால்,

போலீசார் அவனிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள காவல் நிலையத்துக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர் மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!