இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீனிக்கு தட்டுப்பாடு!
இலங்கையின் பல பகுதிகளில் தற்போது கடுமையான சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனியானைது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இலங்கையின் சில பகுதிகளில் ஒரு கிலோ வெள்ளை சீனி 320 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதுடன்ன, ஒரு கிலோ பிரவுன் சீனியின் விலை 370 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் ஒரு நபருக்கு ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே கடைக்காரர்கள் வழங்குகிறார்கள்.
இதேவேளை, சீனியின் விலை உயர்வினால் சீனி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)