சீனாவில் பரவி வரும் மர்மமான தொற்று நோய்
சீனாவில் பரவி வரும் மர்மமான தொற்று நோய் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் கல்வி நிறுவனங்களில் இந்த நோய் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த காய்ச்சல் நிலை வடக்கு சீனாவின் பல பகுதிகளில் அடிக்கடி பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொற்று நோயின் நிமோனியா போன்ற சுவாச நோய் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே பல பாடசாலை மாணவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக வட சீனாவில் உள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சிறுவர்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்களும் இந்த நிமோனியா நிலைக்கு பலியாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பீஜிங்கில் உள்ள மருத்துவமனைகள் உட்பட பல பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், சீனாவில் பரவி வரும் இந்த நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச ஊடகங்களும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் நோய் நிலை குறித்த உண்மையான தகவல்களை கேட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நாட்டில் பரவும் சுவாச நோயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சீன அதிகாரிகளிடம் உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.