நெதர்லாந்து தேர்தல்: கீர்ட் வில்டர்ஸின் வியத்தகு வெற்றி
நெதர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கீர்ட் வில்டர்ஸின் தீவிர வலதுசாரி, சுதந்திரத்திற்கான இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மூத்த இஸ்லாமிய எதிர்ப்பு ஜனரஞ்சகத் தலைவர் Geert Wilders டச்சு பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியைப் பெற்றுள்ளார்
பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கட்சி 37 இடங்களை பெற்றுவுள்ளது.
அவரது வெற்றி டச்சு அரசியலை உலுக்கியிருக்கிறது, மேலும் இது ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.இது உலக அரசியலில் 2ம் உலகபோருக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய மாற்றம் என கூறப்படுகிறது.
கீர்ட் வில்டர்ஸ் தனது தேர்தல் பிரசாரத்தின்போது 3 முக்கிய விஷயங்களை தெரிவித்தார். நான் வெற்றி பெற்று பிரதமரானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஓட்டெடுப்பு நடத்துவேன். அகதிகளாக வருவோரையும் மொத்தமாக நிறுத்துவேன். அதோடு நெதர்லாந்து இஸ்லாமிய நாடாக மாறுவதை அனுமதிக்க மாட்டேன் என்றார்.
இந்நிலையில் தான் முஸ்லிம் எதிர்ப்பில் தீவிரம்காட்டுவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நெதர்லாந்தை வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கும் கீர்ட் வில்டர்ஸ் நெதர்லாந்தில் பிரதமராவது என்பது 2ம் உலக போருக்கு பின்னர் அங்கு நடக்கும் மிகப்பெரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில கட்சிகள் கீர்ட் வில்டர்ஸ் உடன் கூட்டணி அமைக்க பயப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கட்சி அதிக இடங்களை பெறும்பட்சத்தில் அவர் பிரதமராவது உறுதி என உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.