எரிமலை வெடிக்கும் அச்சம்: எரிமலைக்குழம்புக்கு தண்ணீரை இறைக்க திட்டம்
எரிமலை வெடித்தால் எரிமலைக்குழம்புக்கு தண்ணீரை இறைக்கும் திட்டத்தை ஐஸ்லாந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அத்துடன் நவம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ள அவசர நிலை வியாழக்கிழமை நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐஸ்லாந்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
ஐஸ்லாந்து நாட்டில் 30 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. . கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐஸ்லாந்தில் இதுவரை சுமார் 24,000-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 2010-இல் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய எரிமலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், இதையடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தவித்ததும் நினைவுகூரத்தக்கது.