மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பொதுவாக அசைவ உணவுகளில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. அதன்படி அசைவ உணவுகளில் சிக்கன் மற்றும் மட்டனை விட மீனில் எக்கச்சக்கமான புரோட்டின் நிறைந்துள்ளது. புரதச்சத்துக்கள் மட்டுமல்லாமல் சிக்கன் மற்றும் மட்டனுடன் ஒப்பிடும் போது மீனில் அதிக விட்டமின்கள் இருக்கின்றன.
ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றை விட மீனில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கின்றது. இதனால், இது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
அத்துடன் மீனில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. இது மூளைக்கு வலு சேர்க்கிறது. மத்தி, கெளுத்தி மற்றும் சால்மன் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன்களில் இந்த ஒமேகா -3 அதிகமுள்ளது.
மேலும், செலீனியம், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, போன்ற தாதுக்களும் மீன்களின் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
மேலும், இதில், கூடுதல் நன்மை என்னவன்றால் மற்ற இறைச்சிகளை விட மீன்களில் குறைந்த அளவிலான கலோரிகள் இருக்கின்றன. ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த மீன் ஒரு லேசான, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவாகும்.