வனப் பாதுகாப்புப் பகுதிகளில் கித்துல் வெட்டுவதற்கு அனுமதி
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பிரதேசங்களில் கித்துல் வெட்டுவதற்கு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அனுமதி வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தரமான வெல்லத்திற்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது.
இதன்படி, இந்தப் பகுதிகளில் கித்துல் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கித்துல் உற்பத்திகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தயாரிக்கும் பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது.
இலங்கையில் உள்ள மொத்த கித்துல் மரங்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன் எனவும் அவற்றில் 80% பயன்படுத்தப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.