பிரேசிலில் வாட்டி வதைக்கும் வெப்பம் – கவலையில் மக்கள்
பிரேசிலில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைப்பதாக தெரியவந்துள்ளது.
அங்கு என்றும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை 44.8 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. பிரேசிலின் அராஸுவாய் (Araçuaí) நகரில் அந்த வெப்பநிலை பதிவானது.
El Nino பருவநிலை மாற்றம் இந்த மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.
வெப்பம் இந்த வாரம் தணியக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 3 மாநிலங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று பிரேசில் தேசிய வானிலை நிலையம் கூறியது.
இந்த வெப்பநிலை காரணமாகப் பிரபல இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடத்தும் இசை நிகழ்ச்சியை ஒத்திவைத்தார்.
இதற்குமுன்னர் 2005ஆம் ஆண்டு பிரேசிலில் 44.7 டிகிரி செலசியஸ் அளவுக்குக் கடுமையான வெப்பம் பதிவானதாக தெரியவந்துள்ளது.