இத்தாலி மாஃபியா விசாரணை: 200 பேருக்கு 2,200 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!
பல தலைமுறைகளாக இத்தாலியின் மிகப்பெரிய மாஃபியா விசாரணைகளில் ஒன்றான 200க்கும் மேற்பட்ட பிரதிவாதிகளுக்கு மொத்தம் 2,200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருட விசாரணையில், ‘என்ட்ராங்கேட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் மிரட்டி பணம் பறித்தல் முதல் போதைப்பொருள் கடத்தல் வரையிலான குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் இத்தாலிய செனட்டரும் அடங்குவர், இருப்பினும் தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
‘Ndrangheta ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்கு மிக்க குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாகும்.
முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சியான Forza Italia வின் முன்னாள் செனட்டரும் வழக்கறிஞருமான ஜியான்கார்லோ பிட்டெல்லியும் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர். மாஃபியா வகை அமைப்புடன் கூட்டுச் சேர்ந்ததற்காக பிட்டெல்லிக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.