காலி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பிட்டிதுவ, ஹீனடிகல மற்றும் போகஹகொட பிரதேசங்களில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 33 வயதுக்கு இடைப்பட்ட ஹபராதுவ மற்றும் உனவடுன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள வாகனத்தையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.அதேநேரம் சம்பவத்தின் போது பதிவான சி.சி.டி.வி கெமராவின் காட்சிகள் வௌியாகியுள்ளன.
(Visited 11 times, 1 visits today)