குடிநுழைவு ஆவணத்தில் தகாத வார்த்தைகள் – அமெரிக்கருக்கு கிடைத்த தண்டனை
அமெரிக்கருக்குப் பிலிப்பீன்ஸ் வாழ்நாள் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநுழைவு ஆவணத்தில் தகாத வார்த்தைகளை எழுதியதாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 34 வயதான ஆண்டனி லாரன்ஸ் என்ற நபர் குடிநுழைவு அதிகாரிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் தாய்லந்தின் பேங்காக் நகரிலிருந்து மணிலாவிற்குச் சென்றார்.
இணையப் பயண ஆவணத்தை எழுதி முடிக்குமாறு அதிகாரி ஒருவர் நினைவூட்டியபோது அவர் அலட்சியமாக நடந்துகொண்டதாக நம்பப்படுகிறது. இன்னோர் அதிகாரியை நோக்கி அவர் கடவுசீட்டை வீசியதாக தெரியசந்துள்ளது.
அவர் ஆவணத்தில் பொய்யான முகவரியை எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் லாரன்ஸ் அதை மறுத்துள்ளார். தாம் அதிகாரிகளிடம் உதவி கேட்டபோது அவர்கள் உதவி அளிக்கவில்லை என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணத்தை எழுதி முடிக்கப் பலமுறை முயற்சி செய்ததால் அவசரத்தில் தவறான முகவரியை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார். உடனே மன்னிப்பும் கேட்டதாக அவர் தெரிவித்தார்.