ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் ஏற்படும் அதிகரிப்பு

பிரான்ஸில் வாகனங்களில் வேலைகளுக்குச் செல்வோருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிதி மற்றும் கணக்குகளுக்கான அமைச்சர் கேப்ரியல் அத்தால் இதனை அறிவித்துள்ளார்.

சாரசரி வருமானமாக 2,900 யூரோக்களை மாதாந்த வருவாயாக கொண்டுள்ள, அதேசமயம் வாகனங்களில் பயணித்து பணியிடங்களுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே (Iindemnité kilométrique) அதிகரிக்கப்பட உள்ளது. 5.4% சதவீதத்தால் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.

இரண்டு மில்லியன் தனிநபர்கள் இந்த கொடுப்பனவை பெற ஏற்புடையவர்கள் எனவும், இதற்கான 140 மில்லியன் யூரோக்களை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் கேப்ரியல் அத்தால் குறிப்பிட்டார்.

இந்த அதிகரிப்பானது தற்போதுள்ள பணவீக்கத்தை மதிப்பிட்டு வழங்கப்பட உள்ளது. முன்னதாக சென்ற ஆண்டு ஜனவரியில் (2022) 10% சதவீதத்தால் இந்த கொடுப்பனவுகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!